fbpx

இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தில் இன்றும் நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. வரும் 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்..

வரும் 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.. கரூர், பரமத்தியில் அதிகபட்சமாக 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

இன்ஃப்ளூயன்ஸாவை விட ஒமிக்ரான் ஆபத்தானது.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Sat Apr 8 , 2023
ஒமிக்ரான் மாறுபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் பருவகால காய்ச்சலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.. இஸ்ரேலில் உள்ள பெலினிசன் மருத்துவமனையில் உள்ள ராபின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் அலா ஆட்டம்னா மற்றும் சகாக்கள் நடத்திய ஆய்வில், 2021-ஆம் ஆண்டில் ஒமிக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட, பருவகால காய்ச்சலால் (இன்ஃப்ளூயன்ஸா) பாதிக்கப்பட்ட நபர்கள் (18 வயது அல்லது அதற்கு […]

You May Like