உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை நகரமான ஜோஷிமத்தின் சிங்தார் வார்டில் நேற்று மாலை கோயில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எந்த நேரத்திலும் பெரும் பேரழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளூர்வாசிகள் தொடர்ந்து வாழும் நேரத்தில் இந்த நடைபெற்றுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து கைவிடப்பட்ட நிலையில், சம்பவம் நடந்தபோது கோயிலுக்குள் அவர்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக இல்லை. பல வீடுகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் செய்தி தெரிவித்துள்ளனர்.
அவர்களைத் தவிர, விஷ்ணு பிரயாக் ஜல் வித்யுத் பரியோஜனா ஊழியர்களுக்கான காலனியில் வசிக்கும் 60 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் பங்கஜ் சவுகான் தகவல் தெரிவித்துள்ளார்.