fbpx

நாய் கடியால் அவதிப்படும் டெண்டுல்கர் மகன்..!! லக்னோ அணி வெளியிட்டுள்ள வீடியோ என்ன..?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடியுள்ளார். தந்தை தேர்ந்தெடுத்த அதே கிரிக்கெட்டை மகன் தேர்வு செய்தாலும் இவர் பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதேபோல் U-19லும் இந்திய அணியில் விளையாடியுள்ளார்.

தற்போது நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகி மும்பை அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி இரு அணிவீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கரிடம் லக்னோ வீரர் யுத்வீர் சிங் சரக் ‘எப்படி இருக்கிறாய்’ என விசாரித்தார். இதற்கு அர்ஜுன், ‘நலமாக இருக்கிறேன்… நாய் கடித்து விட்டது’ என்கிறார். இதற்கு அவர் ‘நாயா? எப்போது?’ என கேட்கிறார். இதற்கு அர்ஜுன் ‘நேற்று’ என்று பதில் கூறியுள்ளார். இந்த வீடியோவை லக்னோ அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

தனது காதலனை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்..? எல்லாம் ஒரே மாதிரி இருக்கே..!! வைரலாகும் புகைப்படம்..!!

Tue May 16 , 2023
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சூர்யா, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றார். அவரின் கெரியரில் அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கிலும் பட […]

You May Like