Guide: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரும் போர் பதற்றம் நிலவியது. இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடை உத்தரவுகளை போட்டது. மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து பழிவாங்கியது. பாகிஸ்தான் தரப்பிலும் இந்திய எல்லைகளில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனால் மேலும் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, இருநாடுகளும் போர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இருப்பினும் பாகிஸ்தான் எல்லை மீறிய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தநிலையில், பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்திய அதிகாரிகளுக்கு உதவிய 200 பக்கங்கள் கொண்ட ரகசிய கையேடு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில், என்ன இருந்தது. அது எப்படி அதிகாரிகளுக்கு உதவியது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
200 பக்கங்களை கொண்ட இந்த கையேடு, நில நிறத்தில் இருக்கும். இது ஆயுதப்போர் காலத்தில் பல்வேறு அரசாங்கப் பிரிவுகளிள் குறித்த விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. “யூனியன் போர்க் புத்தகம் 2010 என்பது ஒரு மிகப்பெரிய ரகசியமான மற்றும் குறைந்த பதிப்பில் வெளியிடப்பட்ட கையேடு ஆகும், இது, இந்தியாவின் பாதுகாப்பு, உள்துறை மற்றும் கேபினெட் செயலாளர் நிறுவனங்களின் அதிகாரிகள் உருவாக்கி, ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கும் ஒரு ரகசியமான ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தின் உரிமையாளர்கள் யார் என்பது பற்றிய தகவல், இதனை உருவாக்கியவர்கள் மற்றும் புதுப்பிப்பவர்கள் யார் என்பது கூட ரகசியமாக தான் இருக்கும். ஆனால் மத்திய அமைச்சகங்களைத் தவிர ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளரிடமும் ஒரு நகல் இருப்பதாக கூறப்படுகிறது. தீயணைப்புப் பயிற்சிகள் முதல் வெளியேற்றங்கள் மற்றும் சைரன்கள் வரை, அவசரத் திடீர் நிலைகளுக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றன.
போர் நேரத்தில் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கையேடு முக்கிய அதிகாரிகளுக்கு உதவுகிறது. இந்த ஆவணம் அல்லது புத்தகம், போர் நிலையை எதிர்கொள்வதில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, அவர்களது கடமைகளை தெளிவாகவும், அத்தியாவசியமாகவும் குறிப்பிடுகிறது. இது அவசரமான சூழ்நிலைகளில், குறிப்பாக போரின் போது, சரியான நடவடிக்கைகள் எடுக்க உதவுகிறது.. மேலும், இதில் “எந்த குழப்பமும் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதற்கான தெளிவான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் புத்தகத்தின் கருத்துகள் காலனித்துவ காலத்திற்கு முந்தையது, ஆனால் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது. அதாவது, 2010 ஆம் ஆண்டில், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 174 பேர் கொல்லப்பட்ட கொடிய 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த புத்தகம் மறு வடிவம் பெற்று தற்போதைய தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. மேலும் அந்த தொகுப்பை பராமரித்துவந்த உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளையிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
இந்த 15 ஆண்டு பழமையான கையேட்டின் உள்ளடக்கம் ரகசியமாக இருந்தாலும், அனைத்து அதிகாரிகளாலும் பொதுவாக மேற்கோளிடப்படும் விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. உதாரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய கூட்டத்திற்கு பின், முதல்வரின் அலுவலகம் அந்த கூட்டத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை மராத்திய மொழியில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு வரி இதுபோல இருந்தது: “மத்திய அரசின் யூனியன் போர் புத்தகத்தைப் படித்து, அதில் உள்ள அறிவுறுத்தல்களை அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் அறிவிக்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 2010 ஆம் ஆண்டின் பதிப்பு பழமையானது? அது தகவல் பரவல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் பற்றிய விஷயங்களை எப்படி கையாளும்? உதாரணமாக, பாகிஸ்தானால் விரிவாகப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், குறித்து அதில் விவரிக்கப்பட்டிருந்ததா? என்ற கேள்விகள் எழுகின்றன. “புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு சுமார் 15 ஆண்டுக்கு ஒரு முறையே வெளியிடப்படுகிறது, ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை, மூன்று அமைச்சகங்களும் குறிப்புகளை அனுப்பி வைக்கின்றன. பின்னர் அவை அந்த புத்தகத்தில் ஒட்டப்படுகின்றன. தொழில்நுட்ப புதுப்பிப்புகள் அதிலிருந்து ஒரு பகுதியாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த பழைய கையேடு போர் காலங்களில் தங்கத்தை போன்றது என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் எதிரிகளால் மொபைல் இணைப்புகள் அல்லது நெட்வொர்க்குகளை இலக்கு செய்யப்படக்கூடிய நிலையில், பழைய முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது, தொலைக்காட்சி மற்றும் ரேடியோ போன்ற பழைய ஊடக முறைகள், அவை எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடியவை, அதற்கு மாறாக மொபைல் நெட்வொர்க்குகள் அல்லது இணையதளங்கள் செயலிழந்தாலும், அவற்றை பயன்படுத்துவது முக்கியம் என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
“பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்திய அரசு அவசர நிலைகளை கையாள்வதில் மிகவும் திறமையாக உள்ளது. நமக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது, மற்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.