ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் பஸ், டிப்பர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், திருப்பதி ஏழுமையான் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : பாலியல் உறவுக்கு பாதாம் சாப்பிடலாமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்..? கண்டிப்பா இதை படிங்க..!!