பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் தீக்காயமடைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்கள் தீக்காயம் பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், 11 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஐந்து நபர்கள் 100% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு தொழிற்சாலையில் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மாவட்ட ஆட்சியர் ஆர்கே ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.