தெற்கு ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.
ஈக்வடார் நாட்டின் 2வது பெரிய நகரமான குயாகுவில் நகருக்கு தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் கடற்கரையை மையமாகக் கொண்டு சுமார் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.. இந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.. 126 பேர் காயமடைந்தனர்.. இதே போல் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. எனினும் கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
குவாயாகுவிலில், தலைநகர் குய்ட்டோவிற்கு தென்மேற்கே சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில், கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சில சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குயாகுவிலில் உள்ள மூன்று வாகன சுரங்கப்பாதைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதே போல் பெருவின் வடக்கு எல்லையான ஈக்வடாரில் இருந்து மத்திய பசிபிக் கடற்கரை வரை உணரப்பட்டது. ஈக்வடார் எல்லையில் உள்ள Tumbes பகுதியில் தனது வீடு இடிந்து விழுந்ததில் 4 வயது சிறுமி தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
2016 ஆம் ஆண்டில், ஈக்வடாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.