fbpx

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…!! 46 பேர் பலி..!!

இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியாவில் 5.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவை சுற்றி பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய ஜாவா என்ற பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பல குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் முற்றிலும் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

https://twitter.com/gchahal/status/1594611651046952960?s=20&t=KX0rCuJ3BHD-jWH67EXSUA

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடங்கள் இடிந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதே ஜாவா பகுதியில் கடலுக்கருகே கடந்த 2006ம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், ஜாவா தீவில் வசிக்கும் மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்தனர். அப்போது நடந்த சம்பவத்தில் 360 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் 3 மீட்டர் உயரத்திற்கு ஆழிப்பேரலை உருவானது. இது போன்ற இயற்கையின் கோரத்தாண்டவத்தால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்தனர். இதன் தாக்கமாக சென்னை மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் ஆழிப்பேரலை தோன்றியது அதில் பலபேரின் குடும்பங்கள் சுக்குநூறாக நொறுங்கிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

நளினியின் கணவர் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்!!

Mon Nov 21 , 2022
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டபட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்ட நளினியின் கணவர் முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நளினி அவரது கணவர் முருகன் உள்பட 6 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒருபுறம் நளினிக்கு இது மகிழ்ச்சியை தந்தாலும் தன் கணவர் முருகன் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டது வேதனை அளிக்கின்றது என்று பல பேட்டிகளில் […]

You May Like