fbpx

Earthquake: அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!… கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

Earthquake: ஜப்பான் நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகாத அதே வேளை, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Readmore: பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Kokila

Next Post

Chennai: முக்கிய அறிவிப்பு!… ரயில்கள் நிறுத்தம்!… இன்று இந்த வழித்தடங்களில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

Sun Mar 3 , 2024
Chennai: சென்னையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதற்கு ஈடு செய்யும் வகையாக கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் தற்போது ரயில்வே பராமரிப்பு பணிகள் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து இன்றும்ம் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு ஈடு […]

You May Like