Earthquake: ஜப்பனில் இன்று அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தொலைதூர தீவான ஹச்சிஜோஜிமாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. டோக்கியோவின் தெற்கே உள்ள சிறிய பசிபிக் தீவுகளில் சுமார் 25,000 மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் டோக்கியோவின் தெற்கே உள்ள பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, 50 சென்டிமீட்டர் (20 அங்குலம்) அளவிற்கு அலைகள் தாக்கின. நான்கு பெரிய டெக்டோனிக் தட்டுகளின் மேல் ஜப்பான் நிலப்பரப்பு அமைந்துள்ளதால், அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவில் ஏற்படுகிறது. மேம்பட்ட கட்டிட நுட்பங்கள் மற்றும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நடைமுறைகள் காரணமாக பெரிய நடுக்கம் ஏற்பட்டாலும் பாதிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், 8-9 ரிக்டர் அளவுள்ள ஒரு சாத்தியமான மெகா-நிலநடுக்கம் அடுத்த 30 ஆண்டுகளில் தாக்குவதற்கான சாத்தியம் தோராயமாக 70 சதவிகிதம் உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. இது பசிபிக் கடற்கரையின் பெரும்பகுதியை பாதிக்கும் மற்றும் மோசமான சூழ்நிலையில் 3,00,000 உயிர்களை அச்சுறுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 2011 ஆம் ஆண்டில், வடகிழக்கு ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமியைத் தூண்டியது, இதில் சுமார் 18,500 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: கவனம்!. இந்த தவறுகளால் EPF க்ளெய்ம் நிராகரிப்பு!. காரணங்கள் இதோ!