தாய்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்..
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் தென்கிழக்கே சோன்புரி மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி இரவு விடுதியில் அதிகாலை 1:00 மணிக்கு (1800 ஜிஎம்டி வியாழன்) தீ விபத்து ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. இதுவரை பலியானவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டவர்கள் என்றும் போலீஸ் கர்னல் வுட்டிபோங் சோம்ஜாய் தொலைபேசியில் தெரிவித்தார். இந்த தீ எப்போது கட்டுப்படுத்தப்பட்டது போற விபத்து குறித்த வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை..