திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையம் பகுதியில் தனியார் கெமிக்கல் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கெமிக்கல் குடோனியல் தீப்பற்ற தொடங்கியதும் குடோனில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தீ மளமளவெனபரவுவதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
தனியார் கெமிக்கல் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவி காணப்பட்டது. உயிர் சேதம் எதுவும் இல்லை என்பதினால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more :தந்தையின் இறுதிச்சடங்கில் மோதல்.. சடலத்தை இரண்டாக வெட்டக் கோரிய மகன்கள்..!! கொடூரத்தின் உச்சம்