fbpx

பயங்கர ஷாக்..!! ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு..!! சிஎஸ்கே வீரர் பிராவோ அறிவிப்பு..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நவம்பர் 15ஆம் தேதி அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ உள்ளிட்ட 8 வீரர்களை வெளியேற்றியது. இதில், பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில், இன்னும் அவர் முழு உடல் தகுதியுடன் தான் விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பங்களிப்பையும் கொடுத்து வருகிறார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் 4.4 கோடி ரூபாய் கொடுத்து அவரை சிஎஸ்கே அணி எடுத்தது.

பயங்கர ஷாக்..!! ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு..!! சிஎஸ்கே வீரர் பிராவோ அறிவிப்பு..!!

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலம் பயணித்த பொல்லார்ட், மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருந்தார். வேறு எந்த அணிக்கும் எனக்கு விளையாட விருப்பமில்லை என தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேட்டிங் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது.

பயங்கர ஷாக்..!! ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு..!! சிஎஸ்கே வீரர் பிராவோ அறிவிப்பு..!!

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் சிஎஸ்கே-வின் பவுலிங் கோச்சாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதை சென்னை அணியும் உறுதி செய்துள்ளது. பவுலிங் கோச்சான பாலாஜி, தனிப்பட்ட காரணங்களால் அடுத்த ஆண்டிற்கு தொடர முடியாத காரணத்தினால், இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக பிராவோ தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’வாகன ஓட்டிகளே’..!! ’இனியும் இதை வைத்திருந்தால் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து’.!! உடனே இதை பண்ணுங்க..!!

Fri Dec 2 , 2022
வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”மத்திய-மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால், தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை நம்பர் போர்டில் […]

You May Like