ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவில் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது.
இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா, உத்தப்பிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் வீட்டில் உள்ள சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் அதிர்ந்த நிலையில், அவை கீழேயும் விழுந்தன. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவில், ”டெல்லி முழுவதும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமார் 4 நிமிடம் வரை அது நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மின்விசிறிகளும், விளக்குகளும் அசைந்ததாகவும், சோபாக்கள் அடியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிதாகவும் கூறியுள்ளார்.