fbpx

‘பயங்கரவாதம்’ உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது!. ஐ.நா. மேடையில் ஓங்கி ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!

PM Modi: “ஒருபுறம் பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. உரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 21) அமெரிக்கா சென்றடைந்தார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார். இதனுடன் குவாட் உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். அமெரிக்கப் பயணத்தின் இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22). நியூயார்க்கில் உள்ள நாசாவ் கொலிசியத்தில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் மோடி உரையாற்றினார். 3 நாட்கள் பயணத்தின்போது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றினார்.

அதாவது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வில் பேசிய பிரதமர் மோடி, “மனிதகுலத்தின் வெற்றி நமது கூட்டு பலத்தில் உள்ளது, போர்க்களத்தில் இல்லை. உலகளாவிய அமைதி, வளர்ச்சிக்கு சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் முக்கியமானதாகும் என்றும் “ஒருபுறம் பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருந்தாலும், மறுபுறம் இணைய பாதுகாப்பு, கடல் மற்றும் விண்வெளி ஆகியவை மோதலின் புதிய பகுதிகளாக மாறி வருகின்றன. இவையனைத்தும் இந்தப் பிரச்சினைகளில் உலகளாவிய நடவடிக்கை உலகளாவிய லட்சியத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கு சமச்சீர் ஒழுங்குமுறை தேவைப்படுகிறது. இந்தியா தனது இணையவழி பொது உள்கட்டமைப்பை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது” என்றார்.

Readmore: தொடரும் தமிழக மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!

Kokila

Next Post

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச்கூடும்..!

Tue Sep 24 , 2024
A low pressure area is likely to develop over central West Bengal and adjoining areas

You May Like