fbpx

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி கைது..!

இந்தியாவின் 75-வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கான்பூரில் பதுங்கி இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஹபிபுல் இஸ்லாம் (19) என்ற தீவிரவாதியை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹபிபுல் இஸ்லாம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முகமது நதீம் என்ற தீவிரவாதியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்ததுள்ளது.

மேலும் தீவிரவாதி ஹபிபுல் டெலகிராம், பேஸ்புக், மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்ததுள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடமிருந்து செல்போன் மற்றும் கத்தியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Baskar

Next Post

பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்..!!

Sun Aug 14 , 2022
இந்தியாவின் ’வாரன் பஃபெட்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு பங்குச்சந்தை முதலீடுகளில் பிரம்மாண்டம் காட்டிய தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (வயது 62) மும்பையில் இன்று காலமானார். இந்திய பங்குச் சந்தை உலகில் அதிகம் பரிட்சயமான பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இவர், பங்குச் சந்தைகளில் சுமார் 40 முன்னணி நிறுவனங்களின் கணிசமான பங்குகளை வங்கி வைத்துள்ளார். ஒரே நாளில் அவருக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம், அல்லது பல நூறு கோடி ரூபாய் […]
பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்..!!

You May Like