Terrorists: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் காயமடைந்தார் .
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஜம்முவின் கனாசக் பகுதியில் இன்று அதிகாலை 2.35 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 2.35 மணியளவில், எல்லைக்கு அப்பால் இருந்து அக்னூர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் BSF வீரர் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த ராணுவர் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி, ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நவ்ஷேரா செக்டரின் லாம் பகுதியில் பயங்கரவாதிகள் எல்லைக்கு அப்பால் ஊடுருவ முயற்சிப்பதை எச்சரிக்கப்பட்ட ராணுவப் படையினர் கவனித்ததை அடுத்து துப்பாக்கிச் சண்டை நடந்தது.
Readmore: காலையிலேயே அதிர்ச்சி!. நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!. 4 மீனவர்கள் காயம்!