fbpx

4-வது நாளாக தொடரும் சோதனை..!! சிக்கினாரா அமைச்சர் எ.வ.வேலு..? முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஏ.வ. வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மக்களே குடையை மறந்துறாதீங்க..!! இன்னைக்கு 12 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! அலெர்ட்..!!

Mon Nov 6 , 2023
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரைவிட, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு […]

You May Like