fbpx

செம வாய்ப்பு…! TET தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! ஆன்லைன் மூலம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 22.11.2023 முதல் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://tinyurl.com என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II-இல் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

எங்கும் அலையத் தேவையில்லை!… வெறும் ரூ.50 போதும்!… வீடு தேடி வரும் புதிய பான் கார்டு!

Tue Nov 21 , 2023
பான் கார்டு என்பது எவ்வளவு முக்கியம் என்றால், நீங்கள் வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வது வரையிலான முக்கியமான ஆவணமாக இருப்பது பான் கார்டுதான். பண பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட எல்லா இடங்களிலும் அரசாங்கம் பான் கார்டைத்தான் கேட்கிறது. நீங்கள் முதலீடு, சொத்து வாங்குதல் போன்றவற்றின் போது ஆவணச் சான்றாகவும் பயன்படுகிறது.எனவே, பான் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். நீண்ட காலமாக பான் கார்டைப் […]

You May Like