ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியில், மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்தநிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சிஎஸ்கே வீரர்கள் சென்னை வர தொடங்கியுள்ளனர். அந்தவகையில் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை வந்தடைந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் என பெயிரிட்ட T-shirt அணிந்தபடியும் ‘Indian Army’ என பெயர் பொறித்த முககவசம் அணிந்தபடியும் சென்னை விமான நிலையம் வந்த
அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ரசிகர்கள் “தல தோனி, தல தோனி” என கூச்சலிட்டு உற்சாகமடைந்தனர்.