தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் தனது அரசியல் களத்தை தயார் செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் அனைத்து விதமான விவரங்களையும் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய், தனது அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் மூலம் மாநிலம் முழுவதும் ‘தளபதி விஜய் நூலகத்தை’ தொடங்க உள்ளார். விஜய் அவர்கள் கூறியது போல், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புத்தகம் படிக்கும் திறன் மற்றும் பொது அறிவை வளர்க்கும் நோக்கில் முதற்கட்டமாக “தளபதி விஜய் நூலக திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தன்னார்வலர்கள் சார்பில் காலை 10.35 மணிக்கு, தாம்பரம் பிளாக் பாலாஜி நகர் 3வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் இன்று முதற்கட்டமாக திறக்கப்பட உள்ளது என பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு, வேலூர் மாவட்டங்கள் உட்பட 11 இடங்களிலும் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட உள்ளது.