உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் திருக்கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து சார்ந்த சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது. பிரகதீஸ்வரர் கோவிலானது இந்தியாவின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் எடுத்துக்காட்டாகவும் உள்ளது.
இக்கோயில் கி.பி 1035 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சோழர்கள் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நிறுவினார்கள் என்பதற்கு நினைவுச் சின்னமாக அவர்களால் கட்டப்பட்டது தான் இந்த கோயில்கள். குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக கருதப்பட்டு வரும் இக்கோயிலின் உள்ளே நுழைந்ததுமே மிகப்பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் பிரகதீஸ்வரர் தாயான பெரியநாயகியுடன் காட்சியளிக்கிறார். இங்கு அமைந்துள்ள நந்தி வெறும் சுண்ணாம்பு கல்லினால் மட்டுமே செய்யப்பட்டு பல நூறு வருடங்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நந்தியின் மீது பகலில் சூரிய ஒளிபட்டால் அது அப்படியே கோயிலினுள் எதிரொலிக்கிறது. கோயிலில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டாலும் நந்திமீது படும் சூரிய ஒளி கோயிலின் உள்ளே அணையா விளக்காக இருந்து வருகிறது. இப்படி ஒரு கட்டிடக்கலை அறிவை சோழர்கள் செய்திருப்பது தற்போதுள்ள பல கட்டிடக்கலை வல்லுனர்களுக்கும் வியப்பாகவே இருந்து வருகிறது.
பிரகதீஸ்வரர் ஆலயத்தின் மற்றொரு தனி சிறப்பாக கருதப்படுவது, இக்கோயிலின் கருவறைக்குள் சந்திரகாந்த் கல்லினாலான பீடத்தில் லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலநிலை வெயிலாக இருந்தால் கோயிலின் உள்ளே குளிர்ச்சியாகவும், வெளியே குளிர்ச்சியாக இருந்தால் கோயில் உள்ளே வெப்பமாகவும் உணர வைக்கிறது.
பிரகதீஸ்வரர் கோவிலின் சிற்பக் கலையின் பெருமைகள்:
பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டிடக்கலையானது மிகவும் சிக்கலான வடிவமைப்பு மற்றும் பிரமிக்க வைக்கும் சிலைகள், கோபுரங்கள், விமான கோபுரம், நந்தி மண்டபம் போன்ற சிற்பக் கலைகள் மிக புகழ்பெற்றது. கோவிலில் விமான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. பிரகதீஸ்வரர் கோவிலின் விமான கோபுரம் உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக உள்ளது.இது திராவிட கட்டிடக்கலை பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
Read more: ஜன.,9ல் ரிலீசாகிறது ஜனநாயகன்.. தரமான சம்பவம் வெயிட்டிங்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!