தஞ்சாவூர் உண்மையிலேயே அழகானது என்று பெரிய கோயிலில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் குடும்பத்துடன் தரிசனம் செய்தது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சார சின்னமாக இருக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. அந்தவகையில், பிரபல ஹாலிவுட் மார்வல் நடிகர் மைக்கேல் டக்ளஸ் குடும்பத்துடன் தரிசனம் செய்துள்ளார். 79 வயதாகும் மைக்கேல் டக்ளஸ் ஹாலிவுட்டில் மார்வலின் Ant-Man, A perfect Murder, Traffic, Black Rain உட்பட சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். இவர் அவரின் மனைவி Catherine Zeta -Jonas மற்றும் மகன் Dylan Michael Douglas ஆகியவர்களுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், கோவாவில் நடைபெற்ற 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட தயாரிப்பு மற்றும் நிதித்துறையில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை மைக்கேல் டக்ளஸ் பாராட்டினார். மைக்கேல் டக்ளஸ் தஞ்சை பெரிய கோயில் முன்பு எடுத்த போட்டோவை தனது X தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘தஞ்சாவூர் உண்மையிலேயே அழகானது. இந்தியாவில் சர்வதேச சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கின்றன’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.