fbpx

எங்கள் உயிரைக் காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு நன்றி!… கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கபட்ட பாக்., ஈரான் குழுவினர்!

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாகிஸ்தான் மற்றும் ஈரானிய குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்தவகையில், சோமாலியாவின் கிழக்கு கடலில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் நாட்டை சேர்ந்த கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். அந்த கப்பில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்து வைத்திருந்தனர். இதேபோன்று, கடந்த சனிக்கிழமையும் இம்மான் என்ற பெயருடன் சென்ற கப்பலையும் அதில் இருந்த பாகிஸ்தான் மற்றும் ஈரானை சேர்ந்த 17 பேரையும் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர்.

அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தகவலை அறிந்த இந்திய கடற்படை சரியான நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்து கடற்கொள்ளையர்களிடமிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீட்டனர். அதாவது கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3 முறை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களை இந்திய கடற்படை மீட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாகிஸ்தான் மற்றும் ஈரானிய குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ஈரானிய பணியாளர், நாங்கள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டிருந்தோம், பின்னர், சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையை கண்டு பயந்துவிட்டனர்” என்று கூறினார். மேலும், எங்கள் உயிரைக் காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு நன்றி” என்று கூறினர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் இந்திய கடற்படை உறுதியாக இருப்பதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Kokila

Next Post

Paytm செயலிக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி..!! பிப்.29ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை..!! பயனர்கள் அதிர்ச்சி..!!

Thu Feb 1 , 2024
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் (Paytm) செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளது. இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டிற்கு […]

You May Like