fbpx

வருவாய்த்துறை வாட்ஸ் அப் குரூப்புக்கு வந்த அந்த புகைப்படம்..!! மனைவியின் அந்தரங்கத்தை அனுப்பிய கணவர்..!!

வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் கள்ளக்காதலர்களின் புகைப்படங்களை கணவர் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி கிராமம் பெண்டரபள்ளி தரப்பு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வேடியம்மாள். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே போச்சம்பள்ளி தாலுகா மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சென்னகிருஷ்ணன். இவருக்கும் வேடியம்மாளுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மலர்ந்துள்ளது. பின்னர், காதல் இளம் ஜோடிகள் இருவருக்கும் திருமணம் ஆனதை மறந்து காதலின் ஒருபடி மேலே சென்று மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் செய்வது கள்ளக்காதல் என்பதை மறந்து கள்ள திருமணம் செய்துகொண்டு அதனை நினைவு சின்னமாக பத்திரப்படுத்த இருவரும் ஒன்றாக சேர்ந்து இன்ப சுற்றுலா சுற்றியதை புகைப்படமாக எடுத்து ரசித்து வந்துள்ளனர்.

வருவாய்த்துறை வாட்ஸ் அப் குரூப்புக்கு வந்த அந்த புகைப்படம்..!! மனைவியின் அந்தரங்கத்தை அனுப்பிய கணவர்..!!

இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சக்திவேல், அவரது மனைவி வேடியம்மாளின் செல்போனை சோதனை செய்த போது அதில் கிராம நிர்வாக அலுவலர் சென்னகிருஷ்ணன் உடன் திருமணம் செய்துகொண்டு கழுத்தில் இரண்டாவதாக மஞ்சள் கயிற்றில் தாலியுடன் செல்ஃபி புகைப்படம் மற்றும் அவருடன் பல இடங்களில் சுற்றி திறந்த புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மனைவி வேடியம்மாளிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஆத்திரம் அடைந்த சக்திவேல் அவரது மனைவி வேடியம்மாள் செல்போனில் இருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரும் இருக்கும் 21 புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து வேகமாக பரவி வரும் விவகாரம் வருவாய்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Chella

Next Post

#தர்மபுரி: சுவர் இடிந்து விழுந்து இறந்த புதுமாப்பிள்ளை..சோகத்தில் குடும்பத்தினர்..!

Sun Dec 18 , 2022
தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள கோணம்பட்டியில் கட்டிட தொழிலாளியாக வசித்து வரும் சுரேஷ் (24) என்பவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த நிலையில் இவர் கீழானூர் கிராம பகுதியில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக சுவரின் ஒரு திடீரென இடிந்து சரிந்து சுரேஷ் மீது விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த சுரேஷ்     சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது […]

You May Like