விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை நிகழ்ச்சியிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் அடுத்து யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. இவர் நிகழ்ச்சியில் முழு ஆர்வத்துடன் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஜோவிகா குறித்த ஒரு விஷயத்தை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். அதாவது, ஜோவிகா பிக்பாஸ் வீட்டுக்குச் சென்ற முதல் நாள் நான் பிக்பாஸ் பார்த்திட்டு இருந்தேன். முதல் நாள் என்பதால் யாரும் தூங்காமல் பேசிட்டு இருந்தாங்க. அப்போது ஜோவிகாவும், விசித்திராவும் பேசிட்டு இருந்தாங்க. பேசி முடிச்சதுக்கு அப்புறம் ஜோவிகா கேமராவை பாார்த்து அம்மா நீங்க பார்த்திட்டு இருப்பீங்க என்று தெரியும் போய் தூங்குங்க என்று சொன்னாள். எனக்கு அப்பிடியே ஒரு மாதிரி ஆகிடுச்சு. அவ புரிஞ்சுகிட்டா நான் பார்த்திட்டு இருப்பேன் என்று அப்புறம் நானும் அவ சொன்னதுக்கு பிறகு போய்த் தூங்கிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.