fbpx

விஜய்யின் காலில் விழ சொன்ன தவெக நிர்வாகி..!! தீயாய் பரவும் வீடியோ..!! உண்மை என்ன..?

கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வேளையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை காப்பாத்துங்க சார் என பெண் ஒருவர் நடிகர் விஜயின் காலில் விழுந்து கதறி அழுத நிலையில், அவர் கண்கலங்கினார்.

மருத்துவமனையில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் அந்த பெண்ணிடம் காலில் விழுங்க என்று சொன்னதாக வீடியோ வைரலாகி வருகிறது. இப்படி ஒரு கருத்து வைக்கப்பட்டாலும் வேறு ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. அதன்படி, அந்த பெண்ணிடம் அங்கே பாருங்க.. விஜய் வருகிறார் என்றும் கூட சொல்லப்பட்டு இருக்கலாம். காலில் விழும்படிதான் சொல்லி இருக்க வேண்டும் என்று இல்லை.

ஆடியோ கேட்கவில்லை. அப்படி இருக்க விஜய் மீது குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. வெறுமனே விஜய் வருகிறார் பாருங்க என்று கூட சொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர். எது உண்மையோ, விஜய் அங்கே வந்தது அரசியல் ரீதியாக அவரின் முதல் பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக திமுகவுக்கு இந்த விவகாரம் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Read More : மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது நல்லதா..? மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

English Summary

A video is going viral on social media where actor Vijay told a woman to fall on his feet when he went to visit people in Kallakurichi.

Chella

Next Post

ஆனி மாத பௌர்ணமி..!! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது தெரியுமா..? இவ்வளவு சிறப்பா..?

Fri Jun 21 , 2024
Today is the full moon of Ani month.

You May Like