ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று முடிவடைந்துள்ளது. திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார், சுவாரஸ்யமாக, 1977 முதல் ஜூலை 25 அன்று பதவியேற்கும் 10வது ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆவார்.. 1977 முதல், அனைத்து ஜனாதிபதிகளும் ஜூலை 25-ம் தேதி பதவியேற்றதாக பதிவுகள் காட்டுகின்றன..
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஜனவரி 26, 1950 அன்று பதவியேற்றார்.. அந்த தினத்தை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்… அவர் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மே 1962 வரை பதவியில் இருந்தார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் மே 13, 1962 இல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.. அவர் மே 13, 1967 வரை பதவியில் இருந்தார். ஜாகிர் ஹுசைன் மற்றும் ஃபக்ருதீன் அலி அகமது ஆகிய இரண்டு ஜனாதிபதிகள் உயிரிழந்ததால் தங்கள் பதவிக் காலத்தை முடிக்க முடியாமல் போனது… இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி ஜூலை 25, 1977 அன்று பதவியேற்றார்.
அதன்பிறகு கியானி ஜைல் சிங், ஆர்.வெங்கடராமன், ஷங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி மற்றும் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட குடியரசுத் தலைவர்கள் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றனர். அந்த வகையில் தற்போது திரௌபதி முர்முவும் ஜூலை 25-ல் பதவியேற்கிறார்..