fbpx

மத்திய அரசு வழங்கும் PM Kissan தொகை ரூ.2,000 இந்த தேதியில் வழங்கப்படும்…! வெளியான புதிய தகவல்…!

பிரதமர் கிசான் திட்டத்தின் 13-வது தவணை ரூ.2,000 வரும் மார்ச் 8ம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற செய்தியை வெளியாகியுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் 12 தவணையாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், முதல் தவணை மார்ச் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும்.. மூன்றாவது தவணை டிசம்பர் மாதத்தில் வரவு வைக்கப்படும். 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் பிஎஸ்சி, பி காம் மற்றும் சமூகவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையம் சார்பாக அந்தத் துறையில் 53 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் திட்ட அலுவலர் மற்றும் தரவு ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 53 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23. 2. 2023 தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் […]

You May Like