2024 மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கி பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா(INDIA) கூட்டணி உருவாக்கி கள வேலைகளை தொடங்கியுள்ளனர் எதிர்க்கட்சிகள். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக அரசு மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறது. ஒருபுறம் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி தலைமையிலான அதிமுக, மதுரையே திணறடிக்கும் விதமாக நேற்றைய தினம் மாநாட்டை நடத்தியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளது. தமிழகம் பொறுத்தவரை திமுக-காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது, பாஜக-அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் நாடாளுமன்ற தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்தப்போவதாக தெரிவித்தார். மேலும் செப்டம்பா் 3-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தாா்.
இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து தெரிவித்த அமமுக பொது செயலாளர் தினகரன், நாடாளுமன்றத்தேர்தலுக்கு கூட்டணி அமைத்தால் தேசிய கட்சி தான் தலைமை வகிக்கும். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் காங்கிரஸுடன் கூட்டணி என்பது சாத்தியமில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை என்பதால் நானும் ஓபிஎஸ்ஸும் தேர்தலில் இணைந்து செயல்பாடு முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-தினகரன் தலைமையில் மூன்றாவது கூட்டணி உருவாகவுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ்-தினகரன் ஆகியோருக்கு தென் மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் இவர்கள் தலைமையில் மூன்றவது கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால், பாஜக – அதிமுகவின் வாக்கு வங்கிக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.