மறைந்த சுஷாந்த் சிங் வீட்டில் குடியேறிய நடிகை!… ராம பஜனை.., வீடியோ வைரல்..!

Sushant Singh house: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் குடியேறிய நடிகை ஆதா ஷர்மா ராம பஜனை பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங். இவருடைய மர்மமான மரணம் ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலிவுட்டில் இருக்கும் நெப்போடிசம், அதனால் கைவிட்டு போன படங்கள், சுஷாந்துக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என பல குற்றச்சாட்டுகள் பாலிவுட் திரையுலகின் மீது கூறப்பட்டன.

மேலும், சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர். எனினும் அவரது உடற்கூராய்வு முடிவுகளின்படி சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார்.

இவரின் மரணம் குறித்த மர்மமே விலகாத நிலையில், அவரது வீட்டில் நடிகை அதா சர்மா குடியேறி உள்ளார். தன்னுடைய பாட்டி மற்றும் அம்மாவுடன் பாந்த்ராவில் குடியேறியுள்ளார். 3,600 சதுர அடிக்கு மேல் உள்ள இந்த வீடு 4.5 லட்சம் ஒரு மாதத்திற்கு வாடகை என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, வீட்டில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு ராம பஜனைப் பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஆதா எளிமையான வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்து அமர்ந்திருக்கிறார். பின்னணியில் பூஜை சாதனங்கள் உள்ளன. நெட்டிசன்கள் அவரது குரலைப் பாராட்டி கமெண்டு செய்து வருகின்றனர்.

Readmore: தங்க நகைளை அடமானம் வைப்பதற்கு எந்த நாள் சிறந்தது? எந்த நாளில் அடகு வைக்கக் கூடாது?

English Summary

Actress Aadha Sharma, who settled in late actor Sushant Singh Rajput’s house, has released a video of her singing Rama Bhajan.

Kokila

Next Post

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடக்கம்..!!

Sat Jun 8 , 2024
The first session of the 18th Lok Sabha will begin on June 15, sources said on Friday. The first session will begin in the third week of June with the swearing-in of the newly elected candidates as members of the House.

You May Like