fbpx

ADMK: முதல் கட்சியாக அதிமுகவுடன் கூட்டணி முடிவானது?… பாமகவுக்கு 7+1 தொகுதி பங்கீடு என தகவல்!

ADMK: அதிமுக – பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், பாமகவுக்கு 7+1 தொகுதி பங்கீடு முடிவானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியளவில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. இதேபோல் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே தான் போட்டி. அந்தவகையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டது. இந்த நிலையில், அதிமுக தலைமையில் மிகப் பெரிய கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாமக கட்சிக்கிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது

ஜெயலலிதா பிறந்தநாளை முடித்துக் கொண்டு சேலம் செல்ல திட்டமிட்டு இருந்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும், இதேபோல தேமுதிகவுக்கு 3 நாடாளுமன்ற தொகுதிகளை ஒதுக்க அதிமுக இசைவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Readmore:தேர்தல் முறைகேடுகளுக்கு ‘100’ நிமிடங்களில் நடவடிக்கை.! தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி.!

Kokila

Next Post

Chennai Train : மகிழ்ச்சி செய்தி...! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு‌...! முழு விவரம் இதோ

Sun Feb 25 , 2024
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வோருக்கு வசதியாக சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 5 ரயில்கள், சென்னை கடற்கரை – கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 26-ம் தேதி முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் தாம்பரம் வரை செல்லும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரையும் […]

You May Like