fbpx

“சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (இரண்டாவது சட்டத்திருத்தம்) விதிமுறைகள் 2022 வாயிலாக,  மின்னணு சாதனங்கள் அடைக்கப்பட்ட பேக்கேஜில் குறிப்பிடாத சில கட்டாய விவரங்களை, க்யூ ஆர் கோட் மூலம் வெளியிடுவதை அனுமதிக்கிறது. இந்த சட்டத்திருத்தம்,  விரிவான விவரங்களை தொழில் நிறுவனங்கள் க்யூ ஆர் கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதிக்கிறது.  மேலும், பேக்கேஜின் மேல்பகுதியில், முக்கிய விவரங்களை தெளிவாக வெளியிடுவதையும் அனுமதிப்பதோடு,  எஞ்சிய விவரங்களை க்யூ ஆர் கோட் வாயிலாக நுகர்வோருக்குத் தெரிவிக்கவும் வகை செய்கிறது.  

குறிப்பாக, தயாரிப்பாளர் அல்லது பேக்கிங் செய்வோர் அல்லது இறக்குமதியாளரின் முகவரி, அந்தப் பொருளின் பொதுவான பெயர், அளவு, வடிவம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி நீங்கலான நுகர்வோர் சேவை விவரங்களையும் க்யூ ஆர் கோட் மூலம் அறிந்து கொள்ளலாம்.  இதற்கு முன்புவரை,  மின்னணு சாதனங்கள் உட்பட, பேக்கிங் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், சட்டரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறை 2011-ன்படி, பேக்கிங் மீது சில விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக இருந்தது.

Also Read: தமிழகமே… கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! நாளைக்குள் இதை செய்யவில்லை என்றால் பணம் கிடையாது…!

Vignesh

Next Post

’எங்களிடம் 5 வருடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள்’..! ’இலவச கல்வியை சாத்தியமாக்கி காட்டுகிறோம்’..! அன்புமணி

Sun Jul 17 , 2022
தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுக்கு மட்டும் தான் ஆட்சி செய்ய திறமை இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டை ஆளும் தகுதி உடைய ஒரு கட்சி பாமக தான் என கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 34ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மேடையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ”மற்ற கட்சிகள் எல்லாம் யாரோ துவங்கி, தற்போது வழி […]

You May Like