அமெரிக்காவில் உடற்பயிற்சி பிரபலம் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாள் காலமானார்.
லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்தவர் ரிச்சர்டு சிம்மோன்ஸ். தொலைக்காட்சி பிரபலமான இவர், ஏராளமான உடற்பயிற்சி கூடங்களைத் திறந்து வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்தார். ரசிகர்களால் ‘Fitness Guru’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் Never Say Diet உட்பட 9 புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களாகவே தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் சிம்மோன்ஸ் தனது 76வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அந்த பதிவில், அவரது பதிவில், ‘நன்றி…என் பிறந்தநாளைப் பற்றி இவ்வளவு செய்திகளை என் வாழ்நாளில் நான் பெற்றதில்லை! நான் இங்கே அமர்ந்து மின்னஞ்சல் எழுதுகிறேன். மிகவும் அழகான வெள்ளிக்கிழமையை அனுபவியுங்கள். அன்புடன் ரிச்சர்டு’ என கூறியிருந்தார். ஆனால், மறுநாளே அவர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ரிச்சர்டு சிம்மோன்ஸின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more | உருளைக்கிழங்கை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்ற முடியுமா..!