fbpx

TRB: இவர்கள் எல்லாம் தேர்வு எழுத முடியாது…! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!

ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 கம்ப்யூட்டர் மூலம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

அசத்தல் அறிவிப்பு...! பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு...! தமிழக அரசு தகவல்

Tue Oct 11 , 2022
பனை மரம் ஏற கருவி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நமது மாநில மரமான பனை மரத்தின்‌ சாகுபடியை ஊக்குவித்து, பனை மரங்களை நம்பி வாழும்‌ வேளாண்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்களின்‌ நலனைப்‌ பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ பனை மேம்பாட்டு இயக்கத்தின்‌ கீழ்‌,76 இலட்சம்‌ பனை விதைகளும்‌, ஒரு இலட்சம்‌ பனங்கன்றுகளும்‌ […]

You May Like