fbpx

யார் இந்த சஞ்சீவ் கண்ணா?. சட்டப்பிரிவு 370 முதல் EVM வரை!. நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக நியமனம்!. முக்கிய தீர்ப்புகள் இதோ!

Sanjeev Kanna: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி கண்ணா பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்க உள்ளார். அடுத்தாண்டு மே மாதம் 13ம் தேதி வரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 1960 ஆம் ஆண்டு பிறந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரது தந்தை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இவரது தாயார் சரோஜ் கண்ணா. இவர் இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார். கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருக்கிறார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் சஞ்சீவ் கண்ணா. இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே இப்படி பொறுப்பை வகித்துள்ளனர்.

Readmore: டானா புயலால் திக் திக்.. ‘டானா’ என்பதன் அர்த்தம் என்ன..? எந்த நாடு பெயரை அறிவித்தது?

English Summary

President notifies appointment of Justice Sanjiv Khanna as next Chief Justice of India

Kokila

Next Post

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!. 2 வீரர்கள் உட்பட 4 பேர் வீரமரணம்!. காஷ்மீரில் பதற்றம்!

Fri Oct 25 , 2024
Terrorist attack on army camp! 4 people including 2 soldiers martyred! Tension in Kashmir!

You May Like