fbpx

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

புயலின்போது என்ன செய்ய வேண்டும்..?

* குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு செல்லலாம்.

* முக்கியமான பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அவசர தேவைக்கு டார்ச்லைட், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* வானிலை பற்றிய தகவல்களை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேட்டறிந்து கொள்ள வேண்டும் – வதந்திகளை நம்பக் கூடாது.

* பாதுகாப்பற்ற நிலையிலும் இடியும் நிலையிலும் உள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகக் கூடாது.

* ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லக் கூடாது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

* மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான முறையில் கட்டி வைக்க வேண்டும். படகு இயந்திரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். புயல் ஓய்ந்து விட்டது என கருதி வெளியே வரக் கூடாது. எதிர் திசை காற்று அடித்து ஓய்ந்த பிறகே வெளியே வர வேண்டும்.

* வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

* பால், ரொட்டி மற்றும் உணவுப் பொருட்களை போதுமான அளவில் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அறுந்து விழுந்த நிலையில் மற்றும் தொங்கும் நிலையில் உள்ள மின் கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைக்க வேண்டும்.

Chella

Next Post

#சென்னை :பெண்கள் குளியலறையில் கேமராக்கள்.. இரவில் ரசித்த வந்த காமுகன்..!

Fri Dec 9 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள மேற்கு மாம்பலத்தில் கணவர், மனைவி வசித்து வந்த நிலையில் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாத்ரூமில் குளித்துள்ளார். அதே பகுதி குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக மறைந்து இருந்து செல்போனில் அந்த பெண் குளிப்பதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார்.  இதனை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனால் சத்தம் கேட்டு […]

You May Like