fbpx

இனி பிரச்சனை இல்லை…! ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா…? அரசு சார்பில் முகாம்…!

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்காக இன்று முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌‌.

இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்யப்படும்.

மேலும் புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் போன்ற சேவைகளை பெறலாம். மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை, சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம்.

கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்திற்கு துணை பதிவாளர் அரியலூர், உடையார்பாளையம் வட்டம், தண்டலை கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரியலூர், செந்துறை வட்டம், பெரியாக்குறிச்சி கிராமத்திற்கு தனித்துணை ஆட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம் அரியலூர், ஆண்டிமடம் வட்டம், கூவத்தூர் கிராமத்திற்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள்நுகர் பொருள் வாணிபக்கழகம் அரியலூர் ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ் கிடையாது...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Jan 21 , 2023
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like