சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில்லறை சிகரெட் விற்பனையானது புகையிலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை பாதிக்கிறது என்று குழு கருதுகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் புகைபிடிக்கும் பகுதிகளை அகற்றவும் குழு பரிந்துரைத்துள்ளது.

WHO வழிகாட்டுதல்களின்படி, இந்திய அரசு புகையிலை பொருட்களுக்கு 75% ஜிஎஸ்டி விதிக்க வேண்டும். சமீபத்திய வரி படி, நாட்டில் பீடிகளுக்கு 22%, சிகரெட்டுகளுக்கு 53% மற்றும் புகையில்லா புகையிலைக்கு 64% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை சேர்த்தாலும், புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகளவில் உயர்த்தப்படவில்லை என்பதை நிலைக்குழு கவனத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில், சில்லறையில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒற்றை சிகரெட்டாக கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் அவற்றை வாங்கி புகைக்கின்றனர். எனவே பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து புதிய விதிமுறையை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.