fbpx

“யாரும் பேசாத மிகப்பெரிய மோசடி..” மிடில் க்ளாஸ் மக்களின் சம்பளம் குறித்து பெங்களூரு CEO விமர்சனம்..!!

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் இரு முனைகளிலும் எரிந்து வருகிறது. ஒருபுறம் உயர்ந்து வரும் செலவுகள், மறுபுறம் தேக்கி வரும் சம்பளங்கள் தான் இதற்கு காரணம். நடுத்தர குடும்பத்தை பொறுத்தவரை வருடத்திற்கு ஒருமுறை விமான பயணம் செய்கிறார்கள், புதிய மொபைல் போன்களையும் வாங்குகிறார்கள், மற்றும் கடன் தவணைகளான EMI-களை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள். இதெல்லாம் நம்மிடம் நிதி இருப்பதாக தோன்றக் கூடும்.

பார்ப்பதற்கு நிதி நிலை சீராக இருப்பது போல இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களின் பண நிலை மெதுவாக சிதறி, குறைந்து கொண்டு இருக்கிறது. இதை வெளிப்படையாகக் கவனிக்க முடியாது, ஆனால் நிதி சோர்வு நடந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த CEO ஆஷிஷ் சிங்கால், இந்த சூழலை தெளிவாக சொல்கிறார். “யாரும் பேசாத மிகப்பெரிய மோசடி? நடுத்தர வர்க்க சம்பளங்கள்” என்று அவர் LinkedIn இல் பதிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வருமானம் பெறும் நடுத்தர வர்க்க சம்பளம் ஆண்டுக்கு 0.4% மட்டுமே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உணவுப் பொருள் விலை 80%க்கும் மேலாக உயர்ந்துள்ளது. என்று சிங்கால் கூறுகிறார்.

குடும்பங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவழிக்கின்றன, இதனால் கடனில் பிணைக்கப்பட்டு வருகின்றன. அட்டை கடன்கள் மற்றும் EMI-கள் அதிகரித்து வருவதுடன் உண்மையான சம்பள வளர்ச்சியும் நிலைநிறுத்தமாக உள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இந்திய மக்களின் 31% ஆகும்; 2031-க்குள் 38% ஆகவும், 2047-க்குள் 60% ஆகவும் அதிகரிக்கிறது. இருந்தாலும், நிதி பாதுகாப்பில் மிகக் குறைந்த முன்னேற்றமே உள்ளது என்றார்.

ஏழை மக்கள் நலத்திட்டங்கள் மூலம் ஆதரவு பெறுகிறார்கள். செல்வந்தர்கள் முதலீடுகள் மூலம் செல்வம் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கம் பள்ளிக்கூடக் கட்டணங்கள், மருத்துவச் செலவுகள், எரிபொருள் விலைகள் போன்ற விலை அதிகரிப்புடன் நாள் தோறும் போராடி வருகின்றனர்.

நடுத்தர வர்க்கம் இந்திய பொருளாதாரத்தின் இயந்திரம். ஆனால் இப்போது அந்த இயந்திரம் துள்ளிப் பாயவில்லை. “ஏழை மக்கள் ஆதரவு பெறுகிறார்கள். பணக்காரர்கள் வளம் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் அமைதியாக போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று அவர் கூறுகிறார்.

Read more: “என்னை திருமணம் செய்து கொள்..!” பாகிஸ்தான் ISI அதிகாரியுடன் ‘ஸ்பை’ யூடியூபரின் WhatsApp உரையாடல்..!!

English Summary

‘The biggest scam no one talks about’: Bengaluru CEO slams India’s middle-class salary crisis

Next Post

வீட்டு ஓனருடன் அடிக்கடி உல்லாசம்..!! கண்டித்த கணவரை காரை ஏற்றிக் கொன்ற மனைவி..!! தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Wed May 21 , 2025
The owner of the house, Sudhakar (41), and Pechiyamma had an illicit relationship. After Veldurai went to work, the two had been having sex.

You May Like