fbpx

சீனாவை நடுங்க வைக்கும் மிகப்பெரிய புயல்..! பயங்கர வேகத்தில் காற்று..! தொடர் கனமழை..!

சீனாவில் மிகப்பெரிய புயல் உருவாகியுள்ள நிலையில், அங்கு தொடர் கனமழை பெய்து வருகிறது.

உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயல் கிழக்கு சீனக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ”ஹின்னம்னோர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் படிப்படியாக வடக்கு நோக்கி கிழக்கு சீனக் கடலில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த ஹின்னம்னோர் புயல் சீனாவின் அண்டை நாடுகளான தைவான், ஜப்பான் மற்றும் கொரியாவையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் தேசிய வானிலை மையம் இன்று காலை 10 மணிக்கு மஞ்சள் அலெர்ட் புயல் எச்சரிக்கை அறிவித்த நிலையில், வடகிழக்கு ஜெஜியாங், ஷாங்காய் மற்றும் தைவானில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

சீனாவை நடுங்க வைக்கும் மிகப்பெரிய புயல்..! பயங்கர வேகத்தில் காற்று..! தொடர் கனமழை..!

மேலும், கப்பல்கள் துறைமுகத்திற்குத் திரும்பும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கையாக கிழக்கு சீனாவில் உள்ள நகரங்கள் படகு சேவையை நிறுத்தி வைத்துள்ளன. கிழக்கு சீனாவில் உள்ள நகரங்கள் வென்ஜோவ், ஷாங்காய் நகரில் மீட்புப் பணிகளில் 50,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஹாங்காங் வானிலை ஆய்வகத்தின் படி, இந்த சூறாவளியால் மணிக்கு அதிகபட்சமாக 175 கிமீ (109 மைல்) வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவை நடுங்க வைக்கும் மிகப்பெரிய புயல்..! பயங்கர வேகத்தில் காற்று..! தொடர் கனமழை..!

ஜப்பானின் ஒகினாவாவில் விமானங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலால் கொரிய தீபகற்பத்தில் கனமழை பெய்யும் என்றும், இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தைவானில், நியூ தைபே, தாயுவான் மற்றும் சிஞ்சு மாவட்டங்களில் வசிக்கும் 600-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த புயலால் தைவானின் மியோலி மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் கனமழையால் சுமார் 100 சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அந்நாட்டு போக்குவரத்து மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் படி, தைவான் முழுவதும் சுமார் 40 விமானங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Chella

Next Post

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை; அதிகாரிகளுக்கு தெரியாமல் அது நடக்க வாய்ப்பில்லை.! சென்னை ஐகோர்ட்..!

Sun Sep 4 , 2022
திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமலேயே ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. […]
டெண்டர் முறைகேடு..! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது..! - அறப்போர் இயக்கம்

You May Like