fbpx

பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும்…! பிரசாந்த் கிஷோர் உறுதி…!

பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் பாஜக 272 ஐ தாண்டாது. காற்று பலமாக வீசினால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என அரசியல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்த யோகேந்திர யாதவின் தேர்தல் கணிப்பு குறித்து, பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், நாட்டில் தேர்தல் மற்றும் சமூக-அரசியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்பவர்களில் நம்பகமான முகமான யோகேந்திர யாதவ், 2024 மக்களவைத் தேர்தல் குறித்த தனது இறுதி மதிப்பீட்டை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக 240-260 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 35-45 இடங்களையும் பெறலாம் என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 275 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். நாட்டில் ஆட்சி அமைக்க, 272 இடங்கள் தேவை, பாஜக கூட்டணிக்கு மொத்தம் 303 முதல் 323 இடங்கள் கிடைக்கும். இப்போது யாருடைய அரசாங்கம் அமைக்கப்படுகிறது என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும் என தனது எக்ஸ் தளத்தில் பிரசாந்த் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே... இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும்...! தமிழக அரசு அறிவிப்பு...!

Sun May 26 , 2024
நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2024-ம் மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை உரிய காலகெடுவிற்குள் முடித்திடும் பொருட்டு இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சஹாய் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மே 2024-ம் […]

You May Like