fbpx

பெண்ணுக்கு கிஸ் அடித்த பாஜக எம்.பி.!… இதுதான் மோடியின் குடும்பமா?… எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

BJP:மேற்கு வங்கம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா வடக்கு தொகுதியின் எம்.பி.ஆக உள்ள ககென் முர்மு, மீண்டும் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையொட்டி மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாக்கு சேகரிக்கும் பொது அவர் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

‘மோடியின் குடும்பம்’ என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மால்டா வடக்கு தொகுதி எம்.பி.யாக உள்ள உள்ள ககென் முர்மு, இதற்கு முன்பு ஹபீப்பூர் சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஜஸ்ட் மிஸ்!… தப்பித்த திருமா!… நள்ளிரவு வரை ஐடி சோதனை!… வெறும் கையோடு திரும்பிய அதிகாரிகள்!

Kokila

Next Post

பிரதமர் மோடி இரங்கல்!… ஆர்.எம்.வீரப்பன் மறைவு வேதனை அளிக்கிறது!

Wed Apr 10 , 2024
R.M.Veerappan: வயது மூப்பு, உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98. தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், […]

You May Like