அமெரிக்காவில் 13வயது சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்ட 31 வயது பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலடராடோ மாகாணத்தில் வசித்து வரும் 31 வயது பெண் ஆண்ட்ரியா செர்ரானோ. இவர் கடந்தாண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனுடன் பழகி நட்பு பாராட்டியுள்ளார். இந்நிலையில், ஒரு நாள் அவன் தனியாக இருக்கும் போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.இதன் விளைவாக அந்த பெண் ஆண்ட்ரியா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த புகாரின் பேரில் கொலராடோ காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். ஆண்ட்ரியாவும் தனது தரப்பில் வழக்கறிஞரை வைத்து இந்த வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த சிறுவனுடான உறவின் மூலம் கர்ப்பம் தரித்திருந்த ஆண்ட்ரியாவுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்த குற்றத்திற்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படும் நிலையில் சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க கொலராடோ மாகாண சட்ட விதிகளை வழக்கறிஞர் மூலம் ஆண்ட்ரியா பயன்படுத்திவருகிறார்.