கோவாவின் பனாஜி பகுதியில் 22 வயது இளைஞன் ஒருவர், தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, சடலத்தை மறைத்த நிலையில், போலீசார் அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ் சுஞ்ச்வாட் என்ற அந்த 22 வயது இளைஜர், தனது காதலி காமக்ஷி நாயக்கை (30) கடந்த வியாழன் அன்று போர்வோரிமில் உள்ள அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோவாவில் வசித்து வரும் பிரகாஷ் சுஞ்ச்வாட் என்ற 22 வயது இளைஞருக்கும், அவரது காதலியான காமக்ஷி நாயக் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர் நேரடியாக போலீசாரிடம் சென்று பிரகாஷ் குறித்து புகார் அளித்துள்ளார். பின்னர், பிரகாஷை அழைத்த போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, காதலி மீது கோபம் கொண்ட அந்த இளைஞன், அடுத்த நாள் காலை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். இறுதியில் தன்னிடம் இருந்த கத்தியால் பலமுறை அவரை குத்தி கொலை செய்துள்ளார். உடனே தான் செய்த கொலையை மறைக்க, அந்த நபர் அப்பெண்ணின் சடலத்தை ஒரு காரில் ஏற்றியுள்ளார். அந்த இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் பயணம் செய்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு இடத்தில் காதலியின் சடலத்தை தூக்கி எறிந்துவிட்டு கோவா திரும்பியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர், அப்பகுதியில் ரத்தக்கறை இருப்பதை கண்டு போலீசில் புகார் அளித்தனர். பின்னர், 80 கிலோமீட்டர் பயணம் செய்து பிரகாஷை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க, இறந்த பெண்ணின் சடலத்தை 80 கிலோமீட்டர் கொண்டு சென்ற அந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.