மாணவியை காதலிப்பதாக நாடகமாடி, அவருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (21). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மலர்ந்ததை அடுத்து, இருவரும் பல இடங்களுக்கு சென்று ஜாலி செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவராமன், தனது காதலியை அழைத்துக் கொண்டு கீழவளவு மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சிவராமனின் நண்பர்கள் விஜயகுமார், வினோத்குமார் ஆகியோர் அவர்கள் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அவர்களும் அந்த வீடியோவை காட்டி மிரட்டி, மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக கூறி மாணவியை மிரட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்பு சிவராமன் மற்றும் அவருடைய நண்பர்கள் மாணவியை தொடர்பு கொண்டு ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டியதுடன் அவரிடம் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இவர்கள் தொல்லை அதிகமாகவே இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அந்த 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.