திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (68). இவரது மகன்கள் ஏழுமலை (47). திருமலை (44). ஏழுமலையின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். திருமலைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏழுமலையும், தம்பி திருமலையும் கீழ்குப்பம் கிராமத்தில் அருகருகே வசித்து வந்தனர். இருவரும் மதுகுடித்துவிட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், சம்பவத்தன்று இரவும் 11 மணியளவில் ஏழுமலை, திருமலை ஆகிய இருவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அண்ணன் ஏழுமலை, தம்பி திருமலையை இரும்பு பைப்பால் சரமாரியாக அடித்துக் கொலை செய்திருக்கிறார்.
பின்னர், சடலத்தை தங்களது வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் போட்டு லேசாக மண்ணை போட்டு புதைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்குள் வந்துவிட்டார். இதையடுத்து மறுநாள் காலை வழக்கம்போல் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற ஏழுமலை, தம்பியை கொன்றுவிட்டதில் குற்ற உணர்ச்சியில் இருந்த அவர், இதுகுறித்து அங்கிருந்த சக தொழிலாளர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர். பின்னர், தம்பி திருமலையின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Post
ரூ.15 லட்சம் வரை மானியம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!
Mon Feb 27 , 2023
You May Like
-
2023-08-15, 3:31 pm
அதிர்ச்சி கிராம சபை கூட்டங்களில்….! ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்…..!
-
2024-07-02, 12:33 pm
‘இனி சிலிண்டர் வாங்க அதிக பணம் செலவழிக்க தேவையில்லை’..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!
-
2022-12-14, 6:35 am
#Breaking: இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!
-
2024-06-18, 1:24 pm
அடேங்கப்பா..!! பிரேம்ஜி – இந்து தம்பதியின் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா..?