fbpx

படிக்கவில்லை என்று தம்பியை கடுமையாக தாக்கிய அண்ணன்… பரிதாபமாக உயிரிழந்த தம்பி..!

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டாவில் வசிக்கும் கல்லூரி மாணவர் ராஜ்மோகன் சேனாபதி (21). இவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜ்மோகனின் அண்ணன் பிஸ்வாமோகன் (25). இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இந்நிலையில், ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதை அவரது அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார்.

இதனால், அடிக்கடி அண்ணனுக்கும், தப்பிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என கூறி நேற்று இரவு பிஸ்வா மோகன் அவரது தம்பி ராஜ்மோகனிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதில் ராஜ்மோகனை அண்ணன் பிஸ்வா மோகன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், ராஜ்மோகன் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த ராஜ்மோகனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், ராஜ்மோகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் பிஸ்வா மோகனை கைது செய்தனர்.

Rupa

Next Post

பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம்..! புதிய உறுப்பினராக தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம்..!

Wed Sep 21 , 2022
பிஎம் கேர்ஸ் நிதியத்தின் புதிய உறுப்பினர்களாக தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் (PM CARES) அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில், […]

You May Like