பெங்களூரு மாநில பகுதியில் கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட நிலையில், 71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறாக அவர் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. வீடியோவில், ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் 71 வயது நிறைந்த முதியவரை இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனை குறித்து காவல்துறையினர் கூறுகையில், கார் மீது இடித்துவிட்டு நிற்காமல் சென்ற ஸ்கூட்டரை பிடிக்க பின்தொடர்ந்து சென்றுள்ளார் முதியவர்.
அவ்வாறு அந்த இளைஞரை பிடிக்க சென்ற முதியவரை இளைஞர் தனது வாகனத்தில் ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்துச் சென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் இருந்தது ஷாஹீல் என்ற இளைஞர் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.