மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அரங்கேறி வருவது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ஆம் தேதி ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்துச் சென்றனர். மேலும், பழங்குடியினப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதனல், அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானவுடன்தான், உண்மை தெரிய வரும் எனக் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அவரது கணவர் கூறுகையில், “இளம் பெண்ணின் காலில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் நான் உள்பட என் குழந்தைகள், என் பெற்றோரையும் என் மனைவியைத் தனியாக விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என வற்புறுத்தினர்” எனக் கூறியுள்ளார். பெண்ணின் மீதான வன்கொடுமை, வீட்டை எரித்தல், இனரீதியிலான துன்புறுத்தல் முதலான பிரிவுகளில் அந்தப் பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Read More : வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸை இனி இவ்வளவு ஈசியா வாங்கலாமா..? ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க..!!